வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு இன்று (29) காலை சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டார்.
அவரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.