Date:

HNB ‘திரி தரு’ மூலம் 2,500க்கும் அதிகமான குழந்தைகளுக்கு வெகுமதி

இலங்கையின் மிகப்பெரிய புலமைப்பரிசில் திட்டமான HNB ´திரி தரு´ திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் HNB ´சிங்கிதி´ கணக்கு வைத்திருக்கும் மாணவர்களுக்கு மதிப்புமிக்க ரொக்கப் பரிசுகள் மற்றும் உதவித்தொகைகளை வழங்க மீண்டும் தயாராக உள்ளது. அதன் சமீபத்திய செயற்பாட்டு திட்டதின் கீழ், இந்த ஆண்டு 2,500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான பரிசுகளைப் பெற்றுக் கொடுக்கவுள்ளது.

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNBயின் பிரதான தேசிய அளவிலான புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பணப் பரிசுகளுக்கு தகுதி பெறுவதற்கு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் சிங்கிதி கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் 10,000 ரூபாவை கணக்கு இருப்பில் வைத்திருக்க வேண்டும். இந்த தகுதி மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுக் கொள்ளும் வெட்;டுப்புள்ளி மதிப்பெண்களைப் பெறும் எந்த மாணவருக்கும் 5,000 ரூபா ரொக்கப் பரிசு கிடைப்பதுடன் மற்றும் அந்தக் கணக்கிற்கு மாதாந்த நிலையியற் கட்டளை குறைந்தபட்சம் 500 ரூபாவாக இருந்தால், ரொக்கப் பரிசு 10,000 ரூபாவாக இரட்டிப்பாக கிடைக்கும்.

கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரித்து, குறித்த புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி மதிப்பெண்ணை தாண்டிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசில்களை வழங்கும் இலங்கையில் ஒரே ஒரு திட்டம் இதுவாகும். திரி தரு நிதியத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இலங்கையின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு வெகுமதிகளை வழங்குகிறதுடன் மற்றும் இத்திட்டம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் எதிர்கால கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக நிதியை ஒதுக்குவதற்கும் ஊக்குவிக்கின்றது. என HNBஇன் பிரதான முகாமையாளரும், வைப்பு பிரதானியுமான விரங்க கமகே தெரிவித்தார்.

1991ஆம் ஆண்டில் இலச்சினை அந்தஸ்தைக் கொண்ட சிறுவர் சேமிப்புக் கணக்கை ஆரம்பித்த முதலாவது வங்கி HNB ஆகும். ஒட்டுமொத்த இலங்கையின் மாவட்ட அளவில் மிகவும் திறமையான மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில் தொகை வழங்க இந்த திட்டம் முதலில் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் தற்போது கல்விப் பொது தராதர பரீட்சைத் தேர்வுகள் மற்றும் லண்டன் O/L மற்றும் A/L பரீட்சைகளில் சிறந்த சித்தியை எய்திய மாணவர்களுக்கும் புலமைப்பரிசில்களை வழங்க விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் மற்றும் லண்டன் O/L மற்றும் A/L பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் 25,000 ரூபா ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும், HNB க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 100 மாணவர்கள் மற்றும் உயர்தரத்தில் கல்விப் பயிலும் 50 மாணவர்களும் முறையே 25,000 மற்றும் 35,000 ரூபாவை கணக்கு இருப்பு வைத்திருந்தால் ரொக்கப் பரிசுகளைப் பெறுவார்கள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் சார்பாக HNB சிங்கிதி லமா / HNB TEEN கணக்கை 500 ரூபா என்ற குறைந்தபட்ச வைப்புத் தொகையுடன் ஆரம்பிக்கலாம்.

இந்த சிங்கிதி மற்றும் HNB TEEN கணக்கு முறைகளைப் பயன்படுத்தி, HNB இளம் இலங்கையர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது போலவே அவர்களுக்கு வழங்கும் தனித்துவமான வெகுமதிகளினால் அவர்களுக்குள் தொடர்ந்து சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும். இதன் மூலம், நிதி அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இந்த நாட்டின் இளைஞர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய காரணியாகும்.

பிறந்த குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கான சிங்கிதி கிரிகெட்டியோ, குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குள் 1000 ரூபாவை வைப்புச் செய்வதன் மூலம் பெற்றோர் அல்லது உறவினர்களினால் ஆரம்பிக்கலாம். இந்த கணக்கு ஒரு சாதாரண சிறுவர் சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது மற்றும் கணக்கு மீதி அடிப்படையில் குழந்தைகளுக்கு பிறந்தநாள் பரிசுகளையும் வழங்குகிறது. இக்கணக்கு குழந்தைகள் ஐந்து வயதை அடைந்தவுடன் இந்த கணக்கானது HNB சிங்கிதி கணக்காகவும் பின்னர் சிறுவர் 13 வயதை அடையும் போது HNB TEEN கணக்காகவும், மாற்றப்படும். அத்துடன் வங்கியும் HNB சிங்கிதி கிரிகெட்டியோ கணக்கை ஆரம்பிக்கும் போது 1000 ரூபாவை இக்கணக்கில் குழந்தைக்காக பரிசாக வைப்பு செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373