ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (28) இடம்பெறவுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
டுபாய் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
2025 ஆசிய கிண்ணத் தொடரில் மாத்திரம் இந்த இரண்டு அணிகளும் இதுவரை இரண்டு தடவைகள் மோதியுள்ள நிலையில் அதில் இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் இன்றைய இறுதிப் போட்டி கிண்ணத்தை வெல்வதற்கான போட்டி என்பதையும் கடந்து அரசியல் உள்ளிட்ட பல புற காரணிகள் காரணமாக இரண்டு அணிகளுக்கும் மிக முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.
எனவே இரண்டு அணிகளும் பலமாக இன்றைய போட்டியில் மோதும் என எதிர்பார்க்கப்படுகின்றது.