2025ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி மாணவர். M. R. அப்ரார் அஹமத் 184 புள்ளிகள் பெற்றுக் கொண்டு கொழும்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றார்.
இச் சிறப்பான சாதனை மூலமாக அவர், தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவனின் வெற்றிக்கு பாடசாலை அதிபர் திருமதி சானியா டெய்ன் அவர்களின் வாழ்த்துக்களும், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்களிடமிருந்து பாராட்டுகளும் குவிந்தன.
இதேவேளை, பாடசாலை நிர்வாகம், மாணவனின் எதிர்கால கல்வி முயற்சிகளுக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.