Date:

தலாவ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

னுராதபுரம்-குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் நடந்த வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.l

அனுராதபுரத்திலிருந்து குருணாகலை நோக்கிச் சென்ற லொறியும், குருணாகலையிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வேனும் இன்று (25) அதிகாலை தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி மற்றும் லொறியின் சாரதி உட்பட 7 பேர் சிகிச்சைக்காக தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இதன்போது, வேனில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த வேனில் பயணித்த ஏனைய மூன்று பேரின் நிலை மோசமாக இருந்ததால், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொருவர் உயிரிழந்த நிலையில், ஏனைய இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த இந்த வேன் ஜா-எலயில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தது என்று தலாவ பொலிஸார் தெரிவித்தனர

உயிரிழந்தவர்களில் வேன் சாரதி உட்பட நான்கு பேர் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து குறித்து தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை (Fuel Pass) பெறுவது எப்படி?

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: 1.இணையதளத்திற்குச் செல்லுங்கள்:...

Breaking ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள் விநியோகம்!

ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள்...

Breaking ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா,...

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi),...