தனித்துவமான நடிப்பு ஆளுமை கொண்ட நளின் பிரதீப் உடுவெல, தனது 56 வயதில் செவ்வாய்க்கிழமை (23) காலை காலமானார்.
அவர் சில நாட்களாக மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேடை, சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்த அவரின் நடிப்புத் திறமை சரசவி மற்றும் சுமதி உள்ளிட்ட பல விருது விழாக்களில் அங்கீகரிக்கப்பட்டது.
அவர் சிறிது காலம் மேல் மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்