ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (செப்டம்பர் 22) அமெரிக்காவிற்கு புறப்பட்டு செல்லவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் எதிர்வரும் புதன்கிழமை (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் உடன் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.