கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளரான 47 வயதுடைய மஹீல் முனசிங்க ஞாயிற்றுக்கிழமை (21) காலை திடீரென காலமானார்.
அவர் ஞாயிற்றுக்கிழமை (21) காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் மருத்துவமனையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் எல்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது