Date:

மின்சார சபையின் 23,000 பேரின் தொழிலுக்கு பாதுகாப்பில்லை!

அரச சேவையை வலுப்படுத்துவோம், அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்று வழங்கிய வாக்குறுதிகளை நம்பி, பெரும்பாலான அரச ஊழியர்கள் தற்போதைய திசை காட்டி அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரினது தொழில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றன.

அரசாங்கம் இவர்களினது தொழில்கள் குறித்து பொறுப்பேற்காது என்றும், அவர்கள் தானாக முன்வந்து ஓய்வு பெறலாம் என்றும் அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

மின்சார சபை ஊழியர்களை வீதியில் இறக்கி காலாகாலமாக ஆர்ப்பாட்டத்தை நடத்திய தற்போதைய அமைச்சர்களாக இருந்து வரும் முன்னைய தொழிற்சங்க தலைவர்களால் அவர்களினது தொழில்களுக்கு பொறுப்பு கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

‘கிராமத்திற்கு கிராமம், வீட்டுக்கு வீடாக’ எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவைத் வேலைத்திட்டத்தின் கீழ் மிஹிந்தலை தேர்தல் தொகுதியில் இன்று (19) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அதிகாரத்தில் இல்லாதபோது, ​​இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் மின்சார சபை ஊழியர்கள் 23,000 பேரினதும் தொழில்களைப் பாதுகாக்க உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருந்தனர்.

ஆனால் இன்று, அதிகாரத்தோடு அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது, ​​மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை விடுத்து ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

அப்போது பெருமையாகப் பேசிக் கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, இதையெல்லாம் மறந்துவிட்டு, அரசாங்கத்தைப் பாதுகாக்க கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர்.

ஆட்சியைப் பிடித்த பிறகு அரசாங்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை (21) நள்ளிரவு...

சூப்பர் 4 சுற்றுப்போட்டி; இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 தொடரின்...

காசாவிலிருந்து கால்நடையாக வெளியேறும் மக்கள்

காசா நகருக்குள் இஸ்ரேலிய படைகள் நுழைந்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கடலோரத்தில்...

பலஸ்தீன் – காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலா ஓதிவருமாறு கோரிக்கை

பலஸ்தீன் – காஸாவில் சுமார் 23 மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும்...