விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர், 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கையிருப்புடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சேர்ந்த விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஆவார்.
சந்தேக நபர் விமான நிலையத்தில் பணியில் இருந்தபோது, விமான நிலையத்திற்கு வெளியே இரகசியமாக தங்கக் கையிருப்பை எடுத்துச் செல்ல முயன்ற நிலையில், சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சுங்க அதிகாரிகள் அவரது வசம் இருந்து 550 கிராம் எடையுள்ள 40 24 கெரட் தங்க பிஸ்கட்டுகளை மீட்டுள்ளனர்