Date:

ஆப்கானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இலங்கை!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

அபுதாபியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Mohammad Nabi அதிரடியாக துடுப்பாடி இறுதி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடங்களாக 60 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Rashid Khan மற்றும் Ibrahim Zadran தலா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Nuwan Thushara 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 170 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Kusal Mendis ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும், Kusal Perera 28 ஓட்டங்களையும், Kamindu Mendis ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் குழு Bயிலிருந்து இலங்கை அணியும், பங்களாதேஷ் அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஆயுதங்களுடன் ஜிங்கா கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவருமான 'ஹீனட்டியன...

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின் வடகிழக்கு கடலோர நகரமான யிலானுக்கு அருகே நேற்று இரவு, 7.0...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்...

புனித ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்ரா குழு இணைந்து,...