திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் வியாழக்கிழமை(18) மாலை 4.06 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கை கடற்கரைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் (DMC) உறுதியளித்தது

                                    




