பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார சபை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக ஒரு பாதை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.