Date:

துஷித ஹல்லோலுவ பிணையில் விடுதலை

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (18) ஹல்லோலுவவை தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்த நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தியது.

நாரஹேன்பிட்டி பகுதியில் அவரது வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக துசித ஹல்லோலுவ முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் கொழும்பு குற்றப்பிரிவு நடத்திய சோதனையின் போது அவர் ஆகஸ்ட் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரயில்வே அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர் பிமல்

ரயில்வே சேவைகளை முறையாக செயல்படுத்த முடியாத அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து...

லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் வாகன நெரிசல்

பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டு வரும்...

உலக தரவரிசையில் சரிந்த இலங்கை கடவுச்சீட்டு!

உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம்...

அதிகரிக்கும் பதற்றம் : காசா நகருக்குள் முன்னேறும் இஸ்ரேல் படை

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் தொடங்கிய...