Date:

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்த அவர், ரஷ்யாவுடன் வலிமையான வர்த்தக உறவில் இருக்கும் நாடுகளுக்கு எதிராகவும் வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

இவை எதுவும் போதிய பலன் தரவில்லை. உக்ரைன் குறித்த அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாக சமீபத்தில் ரஷ்யா அறிவித்தது. தொடர்ந்து அது உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதே போர் தொடர்வதற்குக் காரணம் என கூறி அவற்றுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து வந்த ட்ரம்ப், தற்போது தனது நட்பு நாடுகளான நேட்டோ நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கி உள்ளார்.

 

நேற்று முன்தினம் ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், இது அமெரிக்காவின் பிரச்சினை என்பதைவிட ஐரோப்பாவின் பிரச்சினை என குறிப்பிட்டார்.

 

இந்நிலையில், நேட்டோ நாடுகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், இதில் இணைய நேட்டோ நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும். நேட்டோ நாடுகளும் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

 

ரஷ்யா போரை நிறுத்துவதில் நேட்டோவின் உறுதிப்பாடு 100% க்கும் குறைவு என்பது உங்களுக்கே தெரியும். நேட்டோவில் உள்ள சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியளிக்கிறது! இது ரஷ்யா மீதான உங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது. எப்படியிருந்தாலும், நீங்கள் என்னுடன் வர தயாராக இருந்தால் நான் ரஷ்யா மீது கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கிறேன். எப்போது என்று சொல்லுங்கள்?” என கேட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் மூலம், போர் நிறுத்தத்துக்கு ரஷ்யாவை இணங்கச் செய்வது ஐரோப்பாவின் பொறுப்பு என்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற அமெரிக்கா உதவும் என்றும் கூறி இருக்கிறார். இதன் மூலம், நேட்டோ நாடுகள் முன்முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் அமெரிக்கா, தனது முயற்சிகளை கைவிடக்கூடும் என்ற எச்சரிக்கையை அவர் அளித்துள்ளார்.

ஏற்கனவே, ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்க அளித்த பேட்டியில், “இந்தியா அவர்களின் (ரஷ்யாவின்) மிகப் பெரிய வாடிக்கையாளராக இருக்கிறார்கள். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு நான் 50% வரியை விதித்தேன். உண்மையில் இது ஒரு பெரிய விஷயம். இது இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்துகிறது” என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ட்ரம்ப்பின் சமீபத்திய கருத்துக்கள் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்கா இழப்புகளைச் சந்திக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன்! – நியூயோர்க் மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது...

தங்க பிஸ்கட்டுகள் கடத்திய பாதுகாப்பு அதிகாரி சிக்கினார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான்...

ஐஸ் உற்பத்தி இரசாயனங்கள்: பொலிஸாருக்கு NDDCB அறிக்கை

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்களில் ஐஸ் போதைபொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருந்ததாகக்...