Date:

தங்க பிஸ்கட்டுகள் கடத்திய பாதுகாப்பு அதிகாரி சிக்கினார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54 வயதுடைய விமான நிலைய ஊழியர் ஒருவர் 210.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5.941 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டார்.

குறித்த ஊழியர், 51 தங்க பிஸ்கட்டுகளை, இரு கால்களின் காலுறைகளுக்குள் மறைத்து வைத்து, ஊழியர்களுக்கான வெளியேறும் வாயில் (staff gate) வழியாக கடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 24 கெரட் தங்கத்தின் பெறுமதி 210,524,575.35 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையின் போது இந்த தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சுங்கம் மேலும் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள...

நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன்! – நியூயோர்க் மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான்...

ஐஸ் உற்பத்தி இரசாயனங்கள்: பொலிஸாருக்கு NDDCB அறிக்கை

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்களில் ஐஸ் போதைபொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருந்ததாகக்...