Date:

நீண்ட தூர பேருந்துகளுக்கு கட்டாய அடிப்படை தர பரிசோதனை

இலங்கை அரசாங்கம் நீண்ட தூர பேருந்துகள் அனைத்தையும் பயணத்துக்கு முன் கட்டாய அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது எதிர்வரும் மாதம் (ஒக்டோபர் 2025) முதல் அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை மற்றும் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

நீண்ட தூர சுற்றுலா பேருந்துகளும் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் அவை அங்கீகரிக்கப்படாது.

100 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகள், பயணத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இதற்கான வழிமுறைகளை சுற்றறிக்கை மூலம் வெளியிட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவாக்க, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வாகன பழுதுபார்க்கும் இடங்களை ஆய்வு செய்து, தகுதிச் சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமளிக்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த செயல்முறையை நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க பிஸ்கட்டுகள் கடத்திய பாதுகாப்பு அதிகாரி சிக்கினார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான்...

ஐஸ் உற்பத்தி இரசாயனங்கள்: பொலிஸாருக்கு NDDCB அறிக்கை

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்களில் ஐஸ் போதைபொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருந்ததாகக்...

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான தீர்வு; ஐ.நாவுக்கு நன்றி தெரிவித்த இலங்கை

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள்...