ஆசிய கிண்ண டி20 தொடரின் குழு B பிரிவில் இன்று (13) நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் ஷமிம் ஹொசைன் அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும், ஜாக்கர் அலி ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்படி, 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 14.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 50 ஓட்டங்களையும், ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய கமில் மிஷார 46 ஓட்டங்களையும் பெற்றனர்.