ஈரான் நாட்டின் இலங்கைத் தூதுவர் Dr.அலி ரேஷா டெல்கோஷ் Dr. Ali Reza Delkhosh அவரது பாரியாரும் இன்று 05.09.2025 நபி பெருமானார் பிறந்த தினத்தினை முன்னிட்டு ரத்மலானையில் உள்ள Islama Home for needy and Orphanage அங்கு வளரும் 20 குழந்தைகளுக்கு தமது பாடசாலைகளுக்கான தேவையான சப்பாத்துகள், புத்தகப் பைகள் பெற்றுக் கொள்ள கிப்ட் வவுச்சர்களை வழங்கி வைத்தார்கள்.
அத்துடன் அங்கு பெறுமதி வாய்ந்த ஈரான் நாட்டு காபட் விரிப்புகளை பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தனர்.
இந் நிகழ்வு கொழும்பு டைம்ஸ் ஆசிரியர் மற்றும் அரப் நியுஸ் சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹம்மட் ரசூல்டீன் தலைமையில் நடைபெற்றது.
அத்துடன் RJ ஆர்ஜே பவுண்டேஷன் றிஸ்வி அவர்களினால் மாணவர்களுக்குத் தேவையான துணி வகைகளும் அன்பளிப்பு செய்தார்.
ரத்மலானை இஸ்லாமா கோம் நீடியின் ஓப்பனேஜ் (அனாதை இல்லம் ) சபையின் செயலாளர் மொஹிடீன் காதர், மற்றும் உறுப்பினர்கள் சஜத் சாகீர், றிசான் சாலிஹ், இவ் இல்லத்தின் முகாமையாளர் முஹம்மத் இம்தியாஸ் , கலந்து சிறப்பித்தனர்.




