Date:

கொழும்பில்மீலாத் நிகழ்வுகள்

மீலாதுன் – நபி (நபிகள் நாயகம் பிறந்த) தினத்தை முன்னிட்டு, கொழும்பு – 12, மெஸேன்ஞர் வீதி, உம்மு ஸவாயா பள்ளிவாசல் நிர்வாக சபை ஒழுங்கு செய்துள்ள வருடாந்த மீலாத் தின வைபவம், எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை ஏழு மணி முதல், கொழும்பு உம்மு ஸவாயா பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
அஜ்வாத் அல் – fபாஸி அரபிக் கல்லூரி அதிபர் “கலீபதுல் ஷாதுலி” அல் ஆலிம் மௌலவி அஹ்மத் சூபி (மஹ்ழரி) ஹழ்ரத் தலைமையில் மஜ்லிஸ் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இ.ஒ.கூ. தென்றல் சேவை, அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலிபரப்புச் செய்யும்.

வை.எம்.எம்.ஏ. பேரவை

கொழும்பு – 09, தெமட்டகொடை வீதி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, ஆண்டுதோறும் நடத்தும் மீலாதுன் – நபி தின வைபவம், எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, வை.எம்.எம்.ஏ. தலைமையகத்தின் டாக்டர் ஏ.எம்.ஏ. அஸீஸ் கேட்போர் கூடத்தில், வை.எம்.எம்.ஏ. தேசியத் தலைவர் அம்ஹர் எம். ஷெரீப் தலைமையில் நடைபெறவுள்ளது.
வைபவத்தில், கொழும்பு பெரிய பள்ளிவாசல் கதீப், வக்பு சபை உறுப்பினர் மௌலவி எம்.என்.எம். இஜ்லான் (காஸிமி) பிரதம பேச்சாளராகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல்

கொழும்பு – 06, வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபையின் அனுமதியுடன், இலங்கையில் உள்ள அல் – பாஸிய்யாஹ் அஷ் – ஷாதுலிய்யா தரீக்கா தலைமையகம் இணைந்து, எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு (மஃரிப் தொழுகையின் பின்பு) மீலாதுன் – நபி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
“கலீபத்துல் குலபா” மௌலவி எம்.இஸட். முஹம்மது (பாரி) தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், இந்தியா – மேலப்பாலையம் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி அதிபர் மௌலவி உஸ்தாஸ் எஸ்.எஸ். ஹைதர் அலி (மிஸ்பாஹி) பங்கேற்று சிறப்புரையாற்றவிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துசித ஹல்லொலுவவின் பிணை மனு நிராகரிப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ தாக்கல் செய்த பிணை மனுவை...

டிரம்பின் உத்தரவு ரத்து – அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து...

புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் காலி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில...

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளை தொழிற்சங்க போராட்டத்தில்

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் நாளை (04) சட்டப்படி வேலை...