இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் நாளை (04) சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர்களின் பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று (03) பிற்பகல் வெளியிடப்பட்டது.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை, கொடுப்பனவு, பதவி உயர்வு வழங்கப்படாமை உட்பட 16 கோரிக்கைகளை முன்வைத்து அதன் ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.