ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அத்துடன், தென்னை முக்கோண வலயப் பணிகளையும் அவர் ஆரம்பித்து வைப்பார்.
அதற்கமைய, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் “நாடே சுபிட்சமாக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025” நிகழ்வு தற்சமயம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது