Date:

சதம் கடந்த பெத்தும் நிஸ்ஸங்க

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க தமது 7வது ஒருநாள் சர்வதேச சதத்தை இன்று (31) பூர்த்தி செய்துள்ளார்.

சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரின் 2 வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

முதலில் தடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சிம்பாப்வே அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பென் கரன் 79 ஓட்டங்களையும், சீக்கந்தர் ராசா 59 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி இலங்கை அணிக்கு 278 என்ற ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

278 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரையில் 3 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க சதம் கடந்ததுடன் ஆட்டமிழக்காது அணிக்கு வலு சேர்த்து வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...