Date:

அளுத்கம தர்கா நகரில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது

இரும்புக் கம்பியால் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கத் தயாரான சந்தேக நபரைக் கட்டுப்படுத்த, பொலிஸார் வானத்தை நோக்கிச் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கம தர்கா நகர் பகுதியில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கம தர்கா நகர் பகுதியில், இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 119 என்ற அவசர அழைப்பு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதன்போது, சந்தேக நபர் ஒருவர் இரும்புக் கம்பியால் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்க முயன்றதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது ரிவோல்வர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும் அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்கா நகரில் வழக்கு விசாரணை ஒன்றின் போது குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஒருவர் மீது அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் டிஸ்சார்ஜ்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்...

பிணை மனு நிராகரிப்பு: சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக...

நிமல் லான்சா கைது

கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)...