அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS TULSA’போர் கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS TULSA (LCS 16)’ 2025 ஆகஸ்ட் 27 கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Littoral Combat வகைக் கப்பலான ‘USS TULSA (LCS 16)’, 127.6 மீட்டர் நீளம் கொண்டதுடன் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் K. A. Moyer கடமையாற்றுகின்றார். இந்தக் கப்பல், சிறிய தாக்குதல் ஹெலிகாப்டர்கள், தாக்குதல் துருப்புக்கள் மற்றும் கவச வாகனங்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது.