கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் களுத்தறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை போத்தலால் தாக்கி காயம் ஏற்படுத்தி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நாகொடை, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் நகர சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.