கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டவற்றில் பல தகவல்கள் போலியானவை.
இவரது நடத்தை மருத்துவ கோட்பாட்டுக்கும், நாட்டின் பொதுச்சட்டத்துக்கும் முரணானது என தெரிவித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நோயாளி ஒருவரின் உடல்நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையிடுவதற்கு பிரதி பணிப்பாளருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவரது பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு சிறந்த சேவை வழங்குவது சுகாதாரத்துறை அமைச்சின் பொறுப்பாகும்.
இருப்பினும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் அவரது விடயதானத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட்டுள்ளார்.ஆகவே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.