Date:

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

 

மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும் ஒரு கத்தாலிக்க பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

 

395 குழந்தைகள் படிக்கும் இந்த பாடசாலையில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், பாடசாலையில் உள்ள தேவாலயத்தில் குழந்தைகள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஜன்னல் வெளியாக திடீரென குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளார்.

 

ரைபிள், ஷாட்கன், பிஸ்டல் உள்ளிட்ட துப்பாக்கி ரகங்களை கொண்டு அவர் இந்த தாக்குதலை நடத்தினார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய நபரும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட...

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச...

Breaking வடக்கு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள்...

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு அனுப்ப நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு...