கஹவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பிரிவு குற்றத் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி கஹவத்தை பொலிஸ் பிரிவில் ஒருவரை சுட்டுக் கொல்ல உதவிய சந்தேக நபர் நேற்று (26) பெல்வாடிய பகுதியில் வைத்து இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.