பத்து பேர் கொண்ட குழு மேற்கொண்ட தனியார் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக 16.6 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுபிலி லங்காபுர சந்தேக நபருக்கு தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் பிணை வழங்கினார்.