Date:

ரணில் நீதிமன்றில் ஆஜராக மாட்டார் என அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் செய்ததாகக் கூறி தனிப்பட்ட விஜயத்தில் ஈடுபட்டதன் மூலம் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி அங்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவிருந்த போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வீதித் தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

எவ்வாறாயினும், கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கலகக் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தற்போது கடுமையான பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“நாங்கள் எதற்கும் தயார்”

இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த இலங்கை பொதுஜன பெரமுன (SLPP)...

சூம்’ தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்த ரணில்

அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய...

Breaking ரணிலுக்கு சரீர பிணை

பத்து பேர் கொண்ட குழு மேற்கொண்ட தனியார் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக 16.6...

நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்: நீர்தாரை இயந்திரம் தயார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதி முறைகேடு...