Date:

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

தடுப்பூசி ஏற்றல் மற்றும் கொவிட் ஒழிப்பு செயற்பாடுகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

தமது சேவைக்காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று(28) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்காக, தூதுவர் வழங்கிய ஒத்துழைப்புகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டியுள்ளார்.

கொவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசி ஏற்றல், மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும், அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தமது சேவையை சிறப்பாக முன்னெடுக்க இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்காக ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் அமெரிக்க தூதுவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவரின் எதிர்கால செயற்பாடுகள் சிறப்புப்பெற, ஜனாதிபதி இதன்போது தமது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...