பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் முச்சக்கர வண்டியில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 வயதுடைய ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.