தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர், 82.05 மீட்டர் துரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இப்போட்டியில் ஜப்பானிய தடகள வீரர் 78.60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
77.43 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த பாகிஸ்தானிய தடகள வீரர் இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதனிடையே, பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நதீஷா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அவர் 57.53 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இது அவரது தனிப்பட்ட புதிய அதிகபட்ச செயல்திறனாக கருதப்படுகின்றது.
இதேவேளை, இந்தப் போட்டியில் ஜப்பானிய தடகள வீராங்கனை 62.20 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தையும், சீன தடகள வீராங்கனை 57.47 மீட்டர் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.