Date:

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் ரத்து

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விடுமுறைகளுக்கான அனுமதியை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்த அந்த அமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் காணப்படும் அனைத்து பதவிகளுக்குமான வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான புதிய ஆட்சேர்ப்புகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த புதிய சுற்றறிக்கை தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிக்கு இலங்கை இலவச சுகாதார சேவை சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், வெளிநாட்டு விடுமுறைகளைப் பெறுவதற்கு நிறுவனக் குறியீட்டில் வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகள், சுகாதார அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இல்லாது போவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், பொது நிர்வாக சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்பட்ட உள்ளூர் விடுமுறை உரிமையும் அதன்மூலம் ரத்தாவதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ​ரோய் டி மெல் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்து, அதற்கான பயிற்சி மற்றும் விசாக்கள் போன்றவற்றைப் பெற்றுள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த புதிய சுற்றறிக்கையால் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சுகாதார அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட இந்த முடிவை வலுவற்றதாக்கி, அந்த சுற்றறிக்கை ரத்து செய்வதற்கான உரிய வகையில் நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளரிடம் கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளம்பிட்டியவில் வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு

வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு...

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும்...

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.