பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பல்வேறுபட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.


 
                                    




