நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில் சுமார் 257 பேர் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 220 ஆண்களும் 37 பெண்களும் அடங்குவர் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்.யு.வுட்லர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு நீரில் மூழ்கிய 102 பேரை மீட்டுள்ளது. இதில் 69 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடங்குவர் என்று ஏஎஸ்பி வுட்லர் தெரிவித்துள்ளார்.