Date:

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T – 56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, 45 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று (15) கைதாகியுள்ளார்.

சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது அவரிடம் இருந்து T – 56 ரக துப்பாக்கி அதற்கு பயன்படுத்தப்படும் மகசின் மற்றும் 14 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மகசின், 2.5 மில்லிமீற்றர் அளவுடைய 9 தோட்டாக்கள், 9 மில்லிமீற்றர் அளவுடைய 9 தோட்டாக்கள், 3 வாள்கள் மற்றும் 2 கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்! – கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச்...

ஜப்பானில் நிலநடுக்கம்..! | சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர்...

வானளவு உயரும் முட்டையின் விலை..!

நாடளாவிய ரீதியில் தற்போது முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட...

அனர்த்தங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை...