Date:

இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தச் சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாளைய தினம் இலங்கை மின்சார சபையின் சகல சேவையாளர்களும் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, பதுளை, திருகோணமலை, குளியாப்பிட்டி, குருநாகல், அநுராதபுரம், கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் கிரிபத்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், எல்.என்.ஜி சமையல் எரிவாயுவின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்தத் திருட்டு உடன்படிக்கையால் நாடு முழுவதும் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர்.

தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக 11 கட்சிகளின் தலைவர்கள் உறுதியளித்திருந்தனர்.

அதன்படி நாளைய தினம் குறித்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு...

கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார் பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார். பிரதி...

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை...

ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார்

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று...