இன்று (12) காலை 05.30 மணியளவில், புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட N.H.M. அப்துல் காதர் வீதியில் உள்ள (Gold Center) இற்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்தில் தனியாருக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், குறித்த நபரின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
விபத்தின் போது குறித்த பஸ் தரிப்பிடமானது முற்றிலுமாக சேதமடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.