தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இரத்மலானை, மஹரகம, தெஹிவளை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதோடு 26 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று இரவு (10) தெஹிவளை பகுதியில் நடத்திய சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.