மொரகல்ல கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த தாய்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
மொரகல்ல பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த அவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
உயிர்காப்பாளர்கள் அவரைத் தேடிக்கொண்டிருந்த வேளையில், பெந்தர பகுதியில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.