மினுவாங்கொடை ஹொரம்பெல்ல நவலோக பிரதேச வைத்தியசாலை பணியாளர் ஒருவரின் இறுதிக் கிரியையில் கலந்துகொண்ட 35 பேருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி இந்த இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளதுடன், ஒரு வாரத்துக்கு பின்னா் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இந்த இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண வீடு இடம்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு அதற்கு முன்னரே காய்ச்சல் நிலைமை, தொண்டை வலி ஆகிய நோய் அறிகுறிகள் இருந்துள்ளதாகவும் சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனா்.