Date:

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (08) கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் ப்ரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கையில் அது மற்றுமொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது விழுந்ததில் குறித்த சாரதி பலத்த காயமடைந்துள்ளார்.

காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெடிகமவைச் சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த கொள்கலனை இயக்கிய இயந்திர இயக்குநரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனர்த்த நிலைமை; நீர் விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு

அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90...

ஜனாதிபதி மல்வத்து பீடத்திற்கு விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (06) காலை மல்வத்து மகா...

வானிலை ஏற்படும் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...

3 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம்

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம்...