போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த முறையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரம் கிளாஸ்கோ நகருக்கு வருகிறார் என ஸ்கொட்லாந்து மக்களை எச்சரிக்கைகும் வகையிலான முழுப்பக்க விளம்பரம் ஒன்று நேற்று காலை வெளியான தி ஹெரால்டில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.