பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 8.40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் டி-56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்