Date:

ட்ரம்பின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி

ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இந்தியா பதலடி கொடுத்துள்ளது.

 

“ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்குவதுடன் மட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கிய எரிபொருள்களில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்துக்கு விற்கிறது. ரஷ்யாவின் போர் ஆயுங்களால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி இந்தியாவுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரித்திருந்தார்.

 

இதற்கு பதிலடி தரும் விதமாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இந்தியா குறிவைக்கப்பட்டுள்ளது. உண்மையில், மோதல் வெடித்த பிறகு, வழக்கமாக கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பாவுக்கு திருப்பி விடப்பட்டதால் தான் ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக அந்த நேரத்தில் இந்தியாவின் இத்தகைய இறக்குமதிகளை அமெரிக்கா தீவிரமாக ஊக்குவித்தது.

 

இந்தியாவின் இறக்குமதிகள் என்பது இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் எரிபொருள் செலவுகளை உறுதி செய்வதற்காக மட்டுமே ஆகும்.. இது உலகளாவிய சந்தை சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்படும் ஒரு தேவையாகும். இருப்பினும், இந்தியாவை விமர்சிக்கும் நாடுகளே ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன என்பம் கவனிக்கத்தக்கது. ரஷ்யாவுடன் அவர்கள் மேற்கொள்ளும் வர்த்தகம் என்பது எங்களைப் போல் தேச நலனுக்கான கட்டாயம் கூட அல்ல.

 

2024-ல் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவுடன் 67.5 பில்லியன் யூரோ மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்தைக் கொண்டிருந்தது. கூடுதலாக, 2023-ல் 17.2 பில்லியன் யூரோ மதிப்பிலான சேவை வர்த்தகத்தைக் கொண்டிருந்தது. இது அந்த ஆண்டு அல்லது அதற்குப் பிறகு ரஷ்யாவுடனான இந்தியாவின் மொத்த வர்த்தகத்தை விட கணிசமாக அதிகம். உண்மையில், 2024-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம், எல்என்ஜி எனப்படும் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதியை 16.5 மில்லியன் டன்களாகக் குறைத்தது. இது, 2022-ஆம் ஆண்டில் 15.21 மில்லியன் டன்களாக இருந்தது.

 

ஐரோப்பா – ரஷ்யா வர்த்தகத்தில் எரிசக்தி மட்டுமல்ல, உரங்கள், சுரங்கப் பொருட்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்களும் அடங்கும்.

 

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதன் அணுசக்தித் தொழிலுக்கு யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, அதன் மின்சார உற்பத்தித் தொழிலுக்கு பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்கிறது.

 

இந்த விவகாரத்தில், இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது. எந்தவொரு பெரிய நாடுகளின் பொருளாதாரத்தையும் போலவே, இந்தியாவும் தனது நாட்டின் நலன்களையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...