Date:

யோஷித மற்றும் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மேற்படி வழக்கு இன்று (4) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

எனினும், இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இன்று விடுமுறையில் உள்ளதால், வழக்கை ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 மற்றும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முறைகேடாக ஈட்டிய 59 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மூன்று தனியார் வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபாரால் மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நனவாகும் தோட்டத் தொழிலாளர்களின் கனவு..!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களுக்கு...

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார்...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு இரண்டு நாட்கள்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை...

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...