Date:

4,000 போலி யுவான் நாணயத்தாள்கள் மீட்பு

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் போலி நாணயத்தாள்கள் மற்றும் போலி இரத்தினக் கற்கள் தொடர்பான இரண்டு வேறுபட்ட சம்பவங்களில் *சீன பிரஜைகள் இருவர்* கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளால் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய சீன பிரஜையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 6 கிலோகிராம் 32 கிராம் போலி இரத்தினக் கற்களை வைத்திருந்த 52 வயதுடைய சீன பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு மடிக்கணினி, ஒரு ஐபேட் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை

லிபியாவின் முன்னாள் தலைவர் மும்மர் கடாபி. இவர் லிபியாவை 42 ஆண்டுகள்...

இறையாண்மைமிக்க தேசத்தை கட்டியெழுப்பும் தருணம் ஆரம்பம் – பிரதமர்

விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும், கூட்டு ரீதியாகவும்...

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் – ஜனாதிபதி

நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான...

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும்...