Date:

அடுத்த 24 மணித்தியாலத்தில் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கற்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

கற்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும்.

எனவே அடுத்த 24 மணி நேரத்திற்கு கடற்சார் சமூகம் மற்றும் மீனவர்களும் இந்தக் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பாலான பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கக்கூடும்.

இந்தக் கடல் பகுதிகளில் கடற்சார் சமூகம் மற்றும் மீனவர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்சார் சமூகம் மற்றும் மீனவர்கள் இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் குறித்து கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜெனிவா கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இன்று (08)...

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

கிராண்ட்பாஸ், மாவத்த பகுதியில் கடந்த 05ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு...

பிரதமர் ஹரிணி பதவி நீக்கப்படுவாரா?

பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற ஊகங்களை...

ரணில் எம்.பி ஆவாரா?: ருவன் அதிரடி பதில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் இருந்தால் அது...